» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியன் வங்கியில் ரூ.120 கோடி கடன் நிலுவை : சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் ஜப்தி!

புதன் 19, ஜனவரி 2022 4:04:43 PM (IST)

இந்தியன் வங்கியில் ரூ.120 கோடி கடனை திருப்பி கொடுக்காததால் சென்னையிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா தங்கநகை மாளிகை கட்டிடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய இரண்டு கட்டிடங்களுக்கான இடத்திற்காக 2017 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கான நிலுவை தொகையை இந்தியன் வங்கிக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து நிலுவை தொகையை செலுத்தவில்லை என்பது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்துள்ளது. அதன் பின்பும் தொடர்ந்து நிலுவை தொகைக்கான கடனை சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் கட்டாமல் இருந்துள்ளனர். போதிய கால அவகாசம் அவகாசம் கொடுத்தும் கடனை திருப்பி கட்டாததால் காவல்துறையினரின் உதவியுடன் இந்தியன் வங்கி அதிகாரிகள் சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர் மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள சரவணா தங்க நகை மாளிகை ஆகிய கட்டங்களை சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory