» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

புதன் 19, ஜனவரி 2022 3:46:17 PM (IST)

குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். 

தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் திகழ்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள். இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போதும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழும்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து வடகிழக்கு பருவ மழை பெய்த காரணத்தினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பின்னர் கொரோனா காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, மீண்டும் நோய்த்தொற்று பரவி வருகிறது. தற்போது பொங்கல் மற்றும் தைப்பூச விடுமுறை நாட்கள் ஆகும். இந்தநிலையில் கடந்த 14 (வெள்ளிக்கிழமை), 15 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினமும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலை குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தற்போது சபரிமலையில் தரிசனம் முடிந்து அய்யப்ப பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் செங்கோட்டை வழியாக செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து குளித்து விட்டு செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளை காட்டிலும் அய்யப்ப பக்தர்கள் அதிகமானோர் குற்றாலம் வருகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் குளித்துச் செல்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory