» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
புதன் 19, ஜனவரி 2022 3:37:12 PM (IST)
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பொங்கல் விடுமுறை தினங்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் ஜனவரி 17, 18 தேதிகளில் கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அரசு தடை விதித்தது. அதன்படி உவரி கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அரசின் விதிமுறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக தைப்பூச திருவிழாவில் தேராட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இந்நிலையில் தைப்பூச திருவிழா தேரோட்டத்திற்கு அனுமதி கோரி நேற்று முன்தினம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில், பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜவினர் மற்றும் பக்தர்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம், கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம், சாலைமறியல் என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.
வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமய்சிங் மீனா, ராதாபுரம் அறநிலையத் துறை ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முன்னதாக திருக்கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு நடந்தது.
கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய்சிங் மீனா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் தேர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். முன்னதாக விநாயகர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். கரோனா இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் 300 பேருக்கு மட்டுமே தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை : அமைச்சர் மனோதங்கராஜ் வரவேற்பு
புதன் 18, மே 2022 5:38:04 PM (IST)

ஜெ.வின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி பேரறிவாளன் விடுதலை: அதிமுக வரவேற்பு
புதன் 18, மே 2022 5:30:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் 128 மையங்களில் 37,418 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்!
புதன் 18, மே 2022 5:21:50 PM (IST)

குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 18, மே 2022 5:14:13 PM (IST)

தாய்மையின் இலக்கணமாக அற்புதம்மாள் விளங்குகிறார் : முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
புதன் 18, மே 2022 5:03:10 PM (IST)

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
புதன் 18, மே 2022 4:15:45 PM (IST)
