» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை துவக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
புதன் 19, ஜனவரி 2022 12:38:20 PM (IST)
கன்னியாகுமரியில் 12 நாட்களுக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு படகு போக்குவரத்து நடத்தவேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் தலைமையில் கன்னியாகுமரி நகர தங்கும் விடுதி உரிமையாளர் சங்கத்தினர் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதன் பயனாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு படகு போக்குவரத்து நடத்த குமரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது. இதைத்தொடர்ந்து 12 நாட்களுக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை : அமைச்சர் மனோதங்கராஜ் வரவேற்பு
புதன் 18, மே 2022 5:38:04 PM (IST)

ஜெ.வின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி பேரறிவாளன் விடுதலை: அதிமுக வரவேற்பு
புதன் 18, மே 2022 5:30:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் 128 மையங்களில் 37,418 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்!
புதன் 18, மே 2022 5:21:50 PM (IST)

குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 18, மே 2022 5:14:13 PM (IST)

தாய்மையின் இலக்கணமாக அற்புதம்மாள் விளங்குகிறார் : முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
புதன் 18, மே 2022 5:03:10 PM (IST)

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
புதன் 18, மே 2022 4:15:45 PM (IST)
