» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

புதன் 19, ஜனவரி 2022 10:11:27 AM (IST)

சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் முககவசம், ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிவகிரி வடக்கு ரத வீதியை சேர்ந்த ரகுராமன் மகன் ரத்தினகுமார் (24) என்பதும், மதுபோதையில் வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து ரத்தின குமாரை கைது செய்து சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory