» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை : அமமுக தொண்டர்கள் முற்றுகை

ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:22:24 PM (IST)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த போதும், அங்கிருந்து திரும்பும் போதும், அ.ம.மு.க., தொண்டர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அ.ம.மு.க., வினர் பழனிசாமிக்கு எதிராக கோஷம் போட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., அ.ம.மு.க., தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory