» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்: ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!

சனி 27, நவம்பர் 2021 5:46:42 PM (IST)



நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்முடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் வெள்ள நீர் ழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

மழை பாதித்த இடங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை அழைத்துச் செல்லும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த சூழலில் சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்முடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து

நாடக கம்பெனிNov 30, 2021 - 08:26:35 PM | Posted IP 108.1*****

திமுக ஒரு நாடக கம்பெனி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். புளுகு மூட்டை சுடலை.. மக்களை எப்படியெல்லாம் முட்டாள் ஆக்குவார்...

kumarNov 28, 2021 - 11:16:12 AM | Posted IP 108.1*****

manavargale NEET tirku nandraga padithu thayar agungal.....arasiyal vilayatiruku paliagamal ungalathu padippil mattum kavan seluthungal...vetri ungaluke..

samiNov 27, 2021 - 08:13:36 PM | Posted IP 49.20*****

no chance

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory