» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூ.2.39 கோடி மோசடி- 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

புதன் 27, அக்டோபர் 2021 12:32:05 PM (IST)

ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி உயர் அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தேவிகாபுரம் சாலையில் உள்ள ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் தணிக்கை குழுவினர் நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வங்கியில் கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கவரிங் நகைகளை 70 பேரின் பெயரில் ரூ.2 கோடியே 39 லட்சத்திற்கு நகை கடன் பெற்றதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆரணி கூட்டுறவு நகர வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் ஊழியர்கள் சரவணன், ஜெகதீஸ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory