» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே சொத்து தகராறில் பைனான்சியர் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்!!

செவ்வாய் 26, அக்டோபர் 2021 5:10:39 PM (IST)

நெல்லை அருகே சொத்து தகராறில் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்துள்னர். 

நெல்லை அருகே உள்ள தாழையூத்து தென்றல் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற முருகானந்தம் (48). இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் தனது வீட்டில் உட்கார்ந்து இருந்தார். இவருடைய மனைவி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் உள்ளே தனது கணவர் முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

அவரை யாரோ அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.  இதுகுறித்து தகவலறிந்ததும் தாழையூத்து டிஎஸ்பி ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் பத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், முருகானந்தத்திற்கும், அவரது தம்பி கிருஷ்ணபெருமாள் (43) என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. எனவே அவர் முருகானந்தத்தை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி, தப்பியோடிய அவரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட முருகா னந்தத்திற்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ஆகும். ஏற்கனவே ஒரு சில வழக்குகளில் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் ஒரு பிரபல வர்த்தக நிறு வனத்தில் அரிவாளால் கண்ணாடியை உடைத்த வழக்கிலும் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் நேற்று அவர் சொத்து பிரச்னை தொடர்பாக தம்பியால் வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முருகானந்தம் கொலை சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்ட மற்றொரு நபரான மணிகண்டன் என்பவர் இன்று அதிகாலையில் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் தாழையூத்து டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory