» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவி கேமராவை அகற்றியது ஏன்? அப்போலோ விளக்கம்!

செவ்வாய் 26, அக்டோபர் 2021 4:16:51 PM (IST)ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் பேசியது: "ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாததால், மருத்துவ ரீதியிலான விவரங்களை எப்படி தெரிவிக்க முடியும்.

அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைப் பட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த விஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமையுண்டு. எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம், ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் அங்கு ஆஜராக மாட்டோம். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விஷயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்கக் கோரியதால் அகற்றினோம்.”


மக்கள் கருத்து

adaminOct 28, 2021 - 08:36:28 PM | Posted IP 185.1*****

அப்போதைய அரசுன்னா.. எடுபிடி அரசா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory