» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை: ஓபிஎஸ்க்கு ஜெயக்குமார் பதிலடி

திங்கள் 25, அக்டோபர் 2021 5:31:02 PM (IST)

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.

சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபிறகு, சசிகலாவின் அரசியல் பிரவேசம் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என, தனது பெயரில் கல்வெட்டை திறந்து வைத்தார். 

இதன்மூலம் அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை சசிகலா வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அதிமுக தலைமை ஏற்பதாக இல்லை. இந்நிலையில், கட்சியில் இரட்டை தலைமை குறித்த கேள்விக்கும், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றிய கேள்விக்கும் பதிலளித்த ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் இயக்கம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று பதிலளித்தார்.

ஓபிஎஸ் கருத்து பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறுகையில், "சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாவுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும் வைக்க கூடாது என கூறியவர் ஓபிஎஸ்’ என்றார். சசிகலாவை நீக்கியது பொதுக்குழுவை கூட்டி எடுக்கப்பட்ட முடிவு. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.


மக்கள் கருத்து

TAMILAGA MAKKALOct 26, 2021 - 01:19:46 PM | Posted IP 162.1*****

GREAT SIR, YOUR DECISION IS EXCELLANT.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory