» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி: தென்காசி அருகே சோகம்!

திங்கள் 25, அக்டோபர் 2021 4:28:23 PM (IST)

தென்காசி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பெயிண்டிங் தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

தென்காசி முப்புடாதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுந்தர் (39). இவரும் தென்காசி கீழப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருணாச்சலம் (40) என்பவரும் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தனர். இவ்விருவரும் பைக்கில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பைக்கில் தென்காசிக்கு வந்து கொண்டிருந்தனர். பைக் கண்டமங்கலம் ரோட்டில் வந்த போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி திடீரென பைக் மீது மோதியது. 

இந்த விபத்தில் சுந்தர், அருணாச்சலம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இச்சம்வம் குறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது தென்காசி அருகேயுள்ள கண்டமங்கலம்- மத்தளம்பாறை சாலையில் சென்ற போதுஇ இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுஇ சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே பகுதியை சேர்ந்த இருவர் உயிரழந்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory