» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்ககடலில் உருவாகிறது குலாப் புயல்: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சனி 25, செப்டம்பர் 2021 5:43:40 PM (IST)

ங்ககடலில் உருவாக உள்ள குலாப் புயல் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குலாப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணிநேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory