» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : மதுரையில் பரபரப்பு

சனி 25, செப்டம்பர் 2021 4:42:56 PM (IST)

மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் வசித்து வரும் துரைராஜ் என்பவர் அந்த பகுதியில் கேபிள் கேபிள் ஆபரேட்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கேபிள் ஆப்பரேட் டர் உரிமம் தரும்படி கடந்த சில மாதங்களாக கேட் டுள்ளார். இதற்கு துரைராஜ் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த், நான் 4 கொலைகளுக்கு மேல் செய்துள்ளேன். 

எனவே என்னிடம் கேபிள் ஆபரேட்டர் உரிமத்தை தந்துவிடு என்று மிரட்டிய தாக தெரிகிறது. இந்த நிலையில் ஆனந்த் நேற்று மாலை வீட்டிற்கு வந்து துரைராஜா மிரட்டி விட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த், துரைராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றதாக தெரிகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஜெய்ஹிந்து புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory