» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை : அக். 31 முதல் தொடக்கம்

வெள்ளி 24, செப்டம்பர் 2021 11:03:34 AM (IST)

கோவை-கோவா இடையே, தினசரி நேரடி விமான சேவை அக்., 31ம் தேதி முதல் துவங்குகிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கரோனா தொற்று பரவலுக்கு முன் தினமும், 35 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தினமும், 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தினமும், 15 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.

கோவையில் இருந்து சென்னை, ஹைதராபாத், டில்லி, பெங்களூரூ உள்பட பல்வேறு உள்நாட்டு நகரங்களுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா, 'கோ ஏர்' உட்பட நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. இச்சூழலில் 'இண்டிகோ' நிறுவனம் சார்பில் கோவை-கோவா இடையே நேரடி விமான சேவை, அக்., 31ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது.'இண்டிகோ' நிறுவன கோவை அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'கோவை-கோவா இடையே இடைநில்லா நேரடி விமான சேவை துவக்கப்படுகிறது. 

தற்போது டிக்கெட் புக்கிங் பணி துவங்கியுள்ளது. அக்., 31ம் தேதி முதல் இந்த விமான சேவை தினமும் வழங்கப்படும். கோவையில் இருந்து இரவு, 10:40 மணிக்கு புறப்பட்டு, 12:05க்கு கோவா சென்றடையும். அதேபோன்று, கோவாவில் இருந்து, நள்ளிரவு, 12:35 மணிக்கு புறப்பட்டு, 01:55 மணிக்கு கோவை வந்தடையும்' என்றனர்.இந்த நேரடி விமான சேவை துவங்க உள்ளது, பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


மக்கள் கருத்து

TamilanSep 24, 2021 - 11:23:47 AM | Posted IP 173.2*****

September la ethu 31st date ..... September 30th date thana

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory