» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.13 லட்சம் மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:22:10 AM (IST)



நெல்லையில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவின்பேரில், மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார், பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை முறைகேடாக கடத்தி விற்பனை செய்தவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடந்த ஓராண்டில் மது கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பலரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 7 ஆயிரத்து 635 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்காக நேற்று அவற்றை லாரியில் ஏற்றிய மதுவிலக்கு போலீசார், நெல்லை ரெட்டியார்பட்டி மகிழ்ச்சி நகர் பகுதியில் உள்ள காலியிடத்துக்கு சென்றனர். அங்கு மதுபாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்தனர். தொடர்ந்து தாசில்தார் தாஸ் பிரியன் முன்னிலையில், மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதால், அங்கு மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நீதிமன்றம் அனுமதியுடன் மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்பிலான 7,635 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடுSep 24, 2021 - 10:25:55 AM | Posted IP 162.1*****

அரசியல்வாதிகள் நடத்தும் மதுஆலைகளை இடிக்கமாட்டாங்களாம்.. விற்கிறவங்க,குடிக்கிறவங்கள மட்டும் தான் பிடிப்பாராம். அப்போ மதுவிலக்கு போலீசார் எல்லாம் எதற்கு ?? பணத்தை பறிக்க மட்டுமே.. ...என்னடா உங்க சட்டம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory