» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி மனுதாக்கல்!

வியாழன் 23, செப்டம்பர் 2021 3:41:12 PM (IST)

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி மனுதாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பையடுத்து, அனைத்து கட்சியினரும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். இதன்படி சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு லட்சுமி பங்காரு அடிகளார் கடந்த திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் போட்டியின்றி தேர்வு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory