» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 2,281 உள்ளாட்சி பதவிகளுக்கு 7,832பேர் வேட்பு மனுத்தாக்கல்

வியாழன் 23, செப்டம்பர் 2021 11:24:12 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,281 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு 7,832பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு 188 பேரும், 288 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 832 பேரும், 23 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 140 பேரும், இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 12பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 129 பேரும், 201 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 549 பேரும், 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 98 பேரும், இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 9 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 108 பேரும், 147 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 475 பேரும், 12 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 76 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 9 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கீழப்பாவூர்; ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 120 பேரும், 213 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 678 பேரும், 19 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 93 பேரும், இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 14 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 204 பேரும்,  294 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 710 பேரும், 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 93 பேரும், இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 8 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 150 பேரும், 168 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 468 பேரும், 12 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 87 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 7 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 192 பேரும், 237 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 701 பேரும், 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 125 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா பதவிக்கு 16 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 37 பேரும், 54 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 171 பேரும், 5 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 30 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 12 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 82 பேரும், 117 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 392 பேரும், 9 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 46 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 11 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வாசுதேவநல்லூhர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 145 பேரும், 186 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 521 பேரும், 13 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 90 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 221 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு 1,355 பேரும், 1,905 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 5,497 பேரும், 144 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 878 பேரும், 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 102 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,281 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு 7,832பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory