» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

திங்கள் 13, செப்டம்பர் 2021 5:19:07 PM (IST)

தமிழகத்தில் நெல்லை, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார்  கூறியதாவது, விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கும். செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று கூறினார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory