» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது!

சனி 31, ஜூலை 2021 4:43:07 PM (IST)

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் 2ம் நிலை சார்பதிவாளர் பதவி வகித்த செந்தில்குமார் என்பவர், துறைரீதியாக நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் கூட தனக்கு முதல் நிலை சார்பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட கோரிக்கை விடுத்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டார்.  

இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரத் கல்வி மூலம் பட்டப் படிப்பை முடிக்காமல், பட்ட மேற்படிப்புப் படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, பதவி உயர்வுப் பட்டியலில் செந்தில்குமாரைச் சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.


மக்கள் கருத்து

சுடலையார்Aug 1, 2021 - 12:24:58 PM | Posted IP 108.1*****

படிக்காதவன் எல்லாம் பெரிய பெரிய அமைச்சர் பதவில இருக்கான் போவியா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory