» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை: டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவிப்பு!

சனி 31, ஜூலை 2021 10:11:41 AM (IST)

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிக்காக்க எதுவாகவும், காவலர்கள் தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

* வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

* காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்

* தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்ட/ மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

* மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த அறிவிப்பு காவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 


மக்கள் கருத்து

adminJul 31, 2021 - 10:26:58 AM | Posted IP 103.1*****

arumai arumai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory