» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.13¾ லட்சம் மோசடி : 2 பேர் மீது வழக்கு பதிவு

வெள்ளி 23, ஜூலை 2021 5:08:37 PM (IST)

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில் இருளப்பபுரம், காமராஜ் சாலையை சேர்ந்தவர் ரெமி கிளார்சன் (30). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனு : நான் படித்துவிட்டு வேலை தேடி வந்தேன். அப்போது எனது தாயாரிடம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த பஷீர் (51) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் எனது தாயாரிடம் உங்களது மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். 

மேலும் பறக்கையை சேர்ந்த ராஜகுமார் என்ற நலம்குமாரை அ.தி.மு.க. பிரமுகர் என்றும், அவர் சென்னை தலைமை செயலகத்தில் அப்போதைய முதல்-அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருவதாகவும் கூறி அவரை என் தாயாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ரயில்வேயில் வேலை வாங்கி தர ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இதை நம்பி என் தாயார் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.

மேலும் பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் மொத்தம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு நேர்முக தேர்வு இருப்பதாக கூறி நேர்முக தேர்வுக்கான கடிதத்தை அவர்கள் தந்தனர். அது தொடர்பாக விசாரித்து பார்த்தபோது அது போலி நேர்முகத் தேர்வுக்கான கடிதம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் பணத்தை திரும்ப தராமல் அவர்கள் மோசடி செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக பஷீர், ராஜகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

அதே மாதிரிJul 24, 2021 - 03:26:37 PM | Posted IP 162.1*****

எல்லா ஊரிலும் இதே மாதிரி டுபாக்கூர் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:23:24 PM (IST)

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory