» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் வலைவீசி 2 மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய வாலிபர் கைது!!

வெள்ளி 23, ஜூலை 2021 4:47:38 PM (IST)

காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டு, 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அவருடைய தந்தை சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. மாணவியின் தாயார் வெளியூரில் தங்கி வேலை செய்கிறார். இந்த நிலையில் மாணவியுடன், மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவை சேர்ந்த அபி (19) என்ற வாலிபர் பழகி வந்தார். 

பின்னர் அவர் மாணவியிடம் காதலிப்பதாகவும், உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறினார். அதை நம்பிய மாணவியை, தனது வீட்டுக்கு அபி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தன்னை அபி திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் மாணவி இருந்து வந்தார். ஆனால்அவரை ஏமாற்றி விட்டு வேறொரு மாணவியுடன் அபி ஓடிய அதிர்ச்சி தகவல் பிளஸ்-2 மாணவிக்கு தெரிய வந்தது.

காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த அபி மீது பிளஸ்-2 மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதே சமயத்தில், அபியுடன் ஓடிய மாணவியின் தாயாரும் போலீசில் புகார் கொடுத்தார். அதில், 10-ம் வகுப்பு படித்து வரும் எனது மகளை அபி கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கடத்திய மாணவியை தன் வீட்டிலேயே அபி தங்க வைத்து இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அபியை அதிரடியாக கைது செய்து, மாணவியை மீட்டனர். பின்னர் இரு மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் ஒருவர் மாணவிகளிடம் காதல் லீலையில் ஈடுபட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

adminJul 24, 2021 - 02:02:47 PM | Posted IP 103.1*****

adei 2k kids

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:23:24 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory