» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சங்கரன்கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் : இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

வெள்ளி 23, ஜூலை 2021 4:40:43 PM (IST)



சங்கரன்கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 50பேரை போலீசார் கைது செய்தனர். 

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோயிலில் மண்டகப்படிதாரர்கள் 50 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் உட்பட சுமார் 50 நபர்கள் ஸ்ரீ கோமதி அம்மாள் மோவிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory