» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு

வியாழன் 22, ஜூலை 2021 11:35:27 AM (IST)

அதிகமுவைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது மத்திய வருமான வரித்துறை சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது. 

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்(53). அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் இவர் அதிமுக ஆட்சியில் 2015 முதல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருந்தபோது வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி டெண்டரை விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கோடிக்கணக்கில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சாயப்பட்டறைகள்,  நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும், சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றனர். சோதனையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,  எம்.ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துக்களை சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது மத்திய வருமான வரித்துறை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:23:24 PM (IST)

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory