» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது : எஸ்.வி.சேகர் புகழாரம்

புதன் 21, ஜூலை 2021 5:40:56 PM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்தார். 

சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கரோனா தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100% கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும், அது யாராக இருந்தாலும் சரி. அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும். ஒரு உன்னத நோக்கத்துடன் செயல்படும் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசை எப்படி விமர்சனம் செய்ய முடியும். தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

திண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 5:23:24 PM (IST)

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory