» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார்: பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜர்!

புதன் 21, ஜூலை 2021 12:36:45 PM (IST)

சிவசங்கர் பாபா வழக்கில் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். 

சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மேலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும்நிலையில்,  சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

இந்த சூழலில், சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக கூறப்படும் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகினர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தநிலையில் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முன்னதாக 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களின் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துகொண்டனர். மேலும் இரண்டு ஆசிரியர்கள் தலைமறைவாக உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory