» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து : பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு

புதன் 21, ஜூலை 2021 12:14:28 PM (IST)

ஆவின் நிறுவனததில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 636 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுவதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அளித்த பேட்டி வருமாறு: ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்களில் நியமனங்கள் நடைபெற்றிருந்தன. அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் அந்தப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு நடத்தப்படும்.

ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory