» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ரூ.17ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் திட்டங்கள்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

செவ்வாய் 20, ஜூலை 2021 12:03:30 PM (IST)

தமிழகத்தில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின.

சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்  இன்று கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் வழியே 14 புதிய தொழில் திட்டங்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory