» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுதந்திர போரட்ட வீரர் வாஞ்சிநாதன் 135வது பிறந்தநாள் : சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சனி 17, ஜூலை 2021 4:56:05 PM (IST)



சுதந்திர போரட்ட வீரர் வாஞ்சிநாதனின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு  மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர் வீர வாஞ்சிநாதன், 1911-ம் ஆண்டு ஜுன் 17-ம் தேதி  நெல்லை ஆட்சியராக இருந்து ஆஷ்துரை என்பவரை மணியாச்சி இரயில்வே நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன் பிறகு அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார். ஆகையால் அவரின் சுதந்திர போராட்ட ஈடுபாட்டை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வீரவாஞ்சிநாதன் பிறந்த தினமான ஜுலை 17-ம் தேதி அரசு விழாவாக கொண்டவும், ஜுன் 17-ம் தேதி நினைவு நாளாக அனுசரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி செய்திமக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வீரவாஞ்சிநாதன் பிறந்த நாளை முன்னிட்டு மணிமண்டபத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் சென்று அங்குள்ள வீரவாஞ்சிநாதன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின்பிரபு, செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் நித்யா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory