» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை கட்டிட காண்டிராக்டர் கொலை: மேலும் 12 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 16, ஜூலை 2021 4:30:05 PM (IST)

நெல்லை கட்டிட காண்டிராக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (35), கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 12-ந் தேதி தாழையூத்து பண்டாரகுளம் அருகே கட்டிட வேலைக்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மூன்று நாட்களாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன. இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தார்கள்.இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய வாகைகுளத்தைச் சேர்ந்த நல்லதுரை, சங்கிலிப் பூதத்தான், குரு சச்சின், மேலப்பாளையத்தை சேர்ந்த அம்மு வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வாகை குளத்தைச் சேர்ந்த உதயராஜ் என்ற வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்கள் கொலைக்கான காரணம் குறித்த பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் மத்திய சிறையில் வாகை குளத்தைச் சேர்ந்த முத்து மனோ என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் முக்கிய எதிரியான ஜேக்கப்பின் உறவினர் கண்ணன் என்பதால் அவரை கொலை செய்ததாக அவர்கள் கூறினார்கள்.

மேலும் இந்த கொலையில் பல்வேறு பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்தும் அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் 16 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் தற்போது நான்கு பேர்களை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதில் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும், சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உள்ளார்.இது தவிர அவரது ஆதரவாளர்கள் என மொத்தம் 12 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இவர்களில் சிலர் களக்காடு மலைப்பகுதி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் களக்காடு மலை பகுதிக்கு சென்றனர்.

அங்கு டிரோன் கேமரா மூலம் மலைப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினார்கள். மேலும் சில பகுதிகளில் போலீசார் நேரில் சென்று அங்கிருந்த சந்தேகப்படும் நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் குற்றவாளிகளை வெளியூரில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி தனிப்படை போலீசார் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory