» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை

வெள்ளி 16, ஜூலை 2021 12:43:01 PM (IST)

அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போக்குவரத்து கழக நிர்வாகிகளின் முன்மொழியை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தை அமல்படுத்த போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை, தொகையை கணக்கிட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory