» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமங்கலம் - கொல்லம் 4 வழிச்சாலை பணிகளை விவசாயிகளின் விருப்பப்படி நிறைவேற்ற வலியுறுத்தல்

சனி 19, ஜூன் 2021 5:46:04 PM (IST)தென்காசி மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர்ராஜை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: புளியங்குடி - சங்கரன்கோவில், திருவேங்கடம், குடிநீர் திட்டப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாசு தொகுதிக்குள் வரும் திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளை விவசாயிகளின் விருப்பப்படி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வாசு தொகுதி வடக்கே ஒரு ஒதுக்குபுறமாக அமைந்துள்ள புறக்கணிக்கப்பட்ட தொகுதி. அதன் வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்து மாவட்ட ஆட்சியர் துணை நிற்க வேண்டும். தமிழ் பிறந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசியின் மாவட்ட ஆட்சியரான தங்கள் இருக்கைக்கு பின்னால் உள்ள டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் என்கிற ஆங்கில எழுத்துக்கு பதில் மாவட்ட ஆட்சித் தலைவர் என்று தமிழில் இருப்பதே சரியாகும். அவ்வாறு எழுதப்பட வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory