» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கமா? சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை!!

புதன் 7, ஏப்ரல் 2021 4:40:48 PM (IST)

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா? என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்க வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை  செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சுகாதாரத் துறை  தரப்பில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது.  தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.  ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பொதுவிடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்றப் பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் கூடுமானவரை வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
 


மக்கள் கருத்து

MakkalApr 7, 2021 - 07:25:19 PM | Posted IP 162.1*****

First election nadathirukka kudathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory