» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் எனக் கூறினாலே போதுமானது: கமல் விமர்சனம்!

செவ்வாய் 9, மார்ச் 2021 3:29:09 PM (IST)

கருணாநிதியை அவமானப்படுத்த மு.க.ஸ்டாலின் எனக் கூறினாலே போதுமானது என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சச்கர நாற்காலியில் அமரும் வரை தான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைக் குறிப்பதாக, திமுகவினர் கோபமடைந்தனர். இதையடுத்து, தான் கருணாநிதியைக் குறிப்பிடவில்லை எனவும், அவர் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது எனவும், கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், கருணாநிதியை அவமானப்படுத்த மு.க.ஸ்டாலின் என்று கூறினாலே போதுமானது என்று கமல் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கமலிடம், கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று கூறினாலே போதுமானது என, நீங்கள் கூறியதன் அர்த்தம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "அந்தக் கூற்றே விளக்கத்தைக் கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், தனிமனிதத் தாக்குதலை முன்னிறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு, "தனிமனிதத் தாக்குதல் இல்லையே. நான் கருணாநிதியை அவமானப்படுத்தியதாகச் சொன்னார்கள். அவமானப்படுத்த வேண்டும் என்றால் இப்படிக் கூட சொல்லலாம் என்றுதான் சொன்னேன். இன்றைக்கு தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் யார் அரசியல் செய்கின்றனர்? இது அகோரமான விஷயம் இல்லையே. நிஜம்தானே" என்று கமல் பதிலளித்தார்.


மக்கள் கருத்து

neethiMar 11, 2021 - 12:20:55 PM | Posted IP 108.1*****

ungalai enna kamal anna-nnna naanga koopiduvom kamal rajini vijay nnu than

ராமநாதபூபதிMar 10, 2021 - 10:04:10 AM | Posted IP 108.1*****

இதை ஒரு தொடை நடுங்கி நீ சொல்வதுதான் உச்சகட்ட காமெடி. நீ என்ன சொன்னாலும் ஸ்டாலின் உன்னை தனது கால்தூசி அளவுக்கு கூட மதிக்கமாட்டார். நீ இரண்டாம் சீமான் அவ்வளவு தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Thalir Products


Black Forest Cakes
Thoothukudi Business Directory