» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மொபட் மீது லோடு ஆட்டோ மோதல்: மதபோதகர் - மனைவி பலி; பேத்தி படுகாயம்

செவ்வாய் 9, மார்ச் 2021 8:37:35 AM (IST)

சேரன்மாதேவி அருகே மொபட் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் மத போதகர் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடைய பேத்தி படுகாயம் அடைந்தார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள புலவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (56). கிறிஸ்தவ மத போதகர். இவருடைய மனைவி அன்னபாக்கியம் (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுந்தர் நேற்று காலையில் தன்னுடைய மனைவியுடன் பரப்பாடியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு மொபட்டில் செல்ல திட்டமிட்டார். அப்போது அவர்கள் தங்களுடைய மகன்வழி பேத்தியான பெர்க்லினையும் (3) மொபட்டில் அழைத்து சென்றனர்.

காலை 11.30 மணிக்கு சேரன்மாதேவியை கடந்து கங்கணான்குளத்தை அடுத்த குரங்குமடம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தேங்காய் லோடு ஏற்றி வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அன்னபாக்கியம், குழந்தை பெர்க்லின் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சேரன்மாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த அன்னபாக்கியம், பெர்க்லின் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு மருத்துவமனைரிக்கு அனுப்பி ைவத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அன்னபாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த பெர்க்லினுக்கு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைரியில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இறந்த சுந்தர், அன்னபாக்கியம் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Thalir Products


Black Forest Cakes




Thoothukudi Business Directory