» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணியில் சமகவுக்கு சீட் உண்டா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு....

திங்கள் 8, மார்ச் 2021 8:49:40 PM (IST)

சரத்குமார் தலைமையில் இயங்கிய சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக பிரிந்ததும், அதில் அங்கம் வகித்த எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கழகம் என தனிக்கட்சி தொடங்கி, தனித்து இயங்கி வருகிறார்.  தென் மாவட்டங்களிலும், சென்னை தாம்பரம், தி.நகர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளிலும் ஏராளமான தொண்டர்களுடன், வெற்றி பெற தேவைப்படும் கணிசமான வாக்குகளுடன் இருக்கிறது சமத்துவ மக்கள் கழகம். 

அதிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் கணிசமான தொண்டர்களை கொண்டுள்ளது சமக. இந்த தேர்தலில் அதன் தலைவர் எர்ணாவூர் நாராயணன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இயங்கி வருகிறார்.  தன் கட்சிக்கு 3 சீட்டுகள் வரை அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை திருவொற்றியூர் தொகுதியை ஸ்டாலின்  தனக்கு எப்படியும் தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் அப்பகுதியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பல மாதங்களாகவே பிரச்சாரம் செய்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உற்சாகமாக இயங்கி வருகிறார். 

ஆனால் இன்னும் அவருக்கு சீட் உறுதி செய்யப்படாததால் சமக தொண்டர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.  இன்று அல்லது நாளை திருவொற்றியூர் தொகுதிக்கு எர்ணாவூர் நாராயணன் பெயர் அறிவிக்கப்படலாம் என அதன் தொண்டர்கள் முழு நம்பிக்கையில் உள்ளனர். எர்ணாவூர் நாராயணன் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவார் என சமக முக்கிய தலைவர்கள் தெரிவித்தனர்.  தங்கள் தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டதும் திமுக கூட்டணிக்கு தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்ய அதன் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.


மக்கள் கருத்து

சண்முகம்Mar 10, 2021 - 09:54:08 AM | Posted IP 108.1*****

அண்ணன் நாராயணன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory