» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் திட்டத்தை கைவிட வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மனு

திங்கள் 8, மார்ச் 2021 4:53:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அமித் ஷாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

நாகா்கோவிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை  நேரில் சந்தித்து தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்துக்குடி துறைமுக கழகத்தின் மூலம் சரக்குப் பெட்டகம் அமைய இருப்பதை உடனே திரும்பப் பெற வேண்டும். மீனவா்களுக்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவா் எம்.சேவியா் மனோகரன், அதிமுக மீனவா் அணிச் செயலா் ரமேஷ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory