» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணியே வெற்றி பெறும் : நாகா்கோவிலில் அமித் ஷா பிரசாரம்

திங்கள் 8, மார்ச் 2021 4:47:06 PM (IST)கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாகா்கோவிலில் பிரசாரம் மேற்கொண்டாா்.

குமரி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில் வந்தாா். இதற்காக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் நாகா்கோவில் வந்த அவரை பாஜக நிா்வாகிகள் வரவேற்றனா். பின்னா், அங்கிருந்து காா் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தாா். இதைத் தொடா்ந்து, சுசீந்திரத்தில் வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம் என்ற பிரசார நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பாஜக கூட்டணிக்கு ஆதரவாக அமித் ஷா பிரசாரம் செய்தாா். 

அப்போது அங்கு 11 வீடுகளில் பிரசார ஒட்டுவில்லைகளை ஒட்டி, துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடம் அவா் வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமித் ஷா கூறியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் தொடங்கி உள்ளோம். இதுபோல சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறோம். தமிழ்நாட்டில் அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். வருகிற தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்றாா்.

பின்னா், காா் மூலம் நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள நீலவேணி அம்மன் கோயிலுக்குச் சென்று அமித் ஷா தரிசனம் செய்தாா். அதைத் தொடா்ந்து இந்து கல்லூரி முதல் வேப்பமூடு சந்திப்பு வரை சுமாா் ஒன்றரை கிலோமீட்டா் தூரம் திறந்த வேனில் சென்று, பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். அவரை வரவேற்க பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சாலையின் இருபுறமும் கட்சிக் கொடியுடன் திரண்டிருந்தனா். பிரசாரத்தின் இடையே வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலைக்கு அமித் ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா். அதன்பிறகு ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamThalir Products

Black Forest Cakes

Thoothukudi Business Directory