» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்

வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

காலில் அறுவை  சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால், அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவந்தார். 

அப்போது, அறுவை சிகிச்சை செய்த காலில் அவருக்கு திடீரென மீண்டும் வலி ஏற்பட்டது.  இதனால் பிரசார நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கமல்ஹாசன் கடந்த 18-ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வலது காலில் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. 

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என கடந்த 19-ம் தேதி கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவைசிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதால் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீடு திரும்பியுள்ள கமல்ஹாசன் 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsNalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory