» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு திருநாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி மாதம் 26-ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஆளுநர் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.
கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு ட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
திங்கள் 8, மார்ச் 2021 5:28:37 PM (IST)

திமுக கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு
திங்கள் 8, மார்ச் 2021 4:56:02 PM (IST)

குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் திட்டத்தை கைவிட வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மனு
திங்கள் 8, மார்ச் 2021 4:53:28 PM (IST)

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணியே வெற்றி பெறும் : நாகா்கோவிலில் அமித் ஷா பிரசாரம்
திங்கள் 8, மார்ச் 2021 4:47:06 PM (IST)

மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை திமுக காப்பி அடிக்கிறது : கமல்ஹாசன் குற்றச்சாட்டு
திங்கள் 8, மார்ச் 2021 10:54:23 AM (IST)

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் : தமிழக அரசு
திங்கள் 8, மார்ச் 2021 8:40:19 AM (IST)
