» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை

வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

ஒசூர் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இன்று காலை 9.30 மணிக்கு  துப்பாக்கி முனையில் 5 கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர்  சீனிவாச ராகவ் மாருதி பிரசாத் உள்ளிட்ட அங்கு வேலை செய்தவர்களை தாக்கி கட்டி வைத்துவிட்டு, 25 கிலோ தங்கம், ரூ.96 ஆயிரம் பணம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

இதன் மதிப்பு  ஏழரை கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் பணம் எடுக்க வந்தவர்களும் துப்பாக்கிமுனையில் கை, கால்களை கட்டி வைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசூர் நகர காவல்துறையினர் முத்தூட் பைனான்ஸ் அலுவலத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நிதி நிறுவனம் ஒன்றில், துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory