» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம் என்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

சென்னை ராஜீவ் கராந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் 908 ஆவது நபராக, ஒரு மருத்துவராக மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன்.

தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டு கரோனா தொற்று பாதிப்பில் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam
Thalir ProductsThoothukudi Business Directory