» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில், நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் இயக்க கோரிக்கை!

வெள்ளி 22, ஜனவரி 2021 10:36:29 AM (IST)

திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மெமு ரயில்கள் இயக்க வேண்டும்.  என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம், துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: தமிழக பயணிகள் பயன்படும் வகையில் திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக திருநெல்வேலிக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கும் மெமு ரயில்கள் இயக்க வேண்டும். 

திருவனந்தபுரம் - நாகா்கோவில் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் திருநெல்வேலிக்கு தினசரி பல்வேறு பணிகளுக்காக செல்லும் பயணிகள் சீசன் டிக்கெட் எடுத்து குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thalir Products

Thoothukudi Business Directory