» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: கமல்ஹாசன் தகவல்

வெள்ளி 15, ஜனவரி 2021 6:35:43 PM (IST)

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது . 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்தநாளன்று இது நிகழ்ந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest CakesThalir ProductsThoothukudi Business Directory