» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் பார்வையிடடனர்!

வெள்ளி 15, ஜனவரி 2021 10:00:07 AM (IST)பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை  ராகுல்காநதி, உதயநிதி ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் பார்வையிட்டனர். 

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியான உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுருநாதர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் பார்வையிட்டனர். 

மொத்தம் 8 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 523 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் காளைகளும் பங்குபெற்றன. வெற்றி பெறும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 26 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகிய இருவர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 15, 2021 - 12:55:50 PM | Posted IP 162.1*****

இந்த கட்சி தான் ஜல்லிக்கட்டுத் தடையை கொண்டுவந்தவங்க தான், வட நாட்டு தத்தி பப்பு வும் , தமிழ்நாட்டு தத்தி மவனும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory