» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)


குற்றாலம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம், சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மெயினருவியில்  ஆர்ச்சை தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்தது . இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றையவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது .இதனால் அருவிகளில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Thalir Products
Black Forest CakesThoothukudi Business Directory