» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டாலின் முதல்வரானதும் செண்பகவல்லி அணை கட்ட நடவடிக்கை : கனிமொழி எம்பி வாக்குறுதி

செவ்வாய் 29, டிசம்பர் 2020 3:52:50 PM (IST)மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் செண்பகவல்லி அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கூறினார்.

தென்காசி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்தினார். ராயகிரியில் கட்சி கொடியேற்றி வைத்து காட்டு நாயக்கன் சமுதாய மக்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தார். பின்னர் விவசாய நிலங்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாய தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். ராயகிரியில் பெண் குழந்தைக்கு வெற்றிச் செல்வி என பெயர் சூட்டினார். தெற்குச் சத்திரம் பகுதியில் வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்துரையாடல் செய்தார்.

சிவகிரியில் பசும்பொன் தேவர் சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி., மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து மகளிர் சுய உதவிக்குழுவினருடன் சந்தித்து உரையாடினார். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஜாஸ்பர் வணிக வளாகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.வாசுதேவநல்லூர் காமராஜர் சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி., மாலை அணிவித்தார். திமுக முன்னோடி முகம்மது மலைக்காயர் இல்லத்திற்கு சென்று பொறிகிழி வழங்கினார்.

மகளிர் சுய உதவிக்குழுவினர், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசும் போது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எந்த துறைகளிலும் வளர்ச்சி எட்டவில்லை. எல்லா துறைகளும் முடங்கி கிடக்கின்றன. மகளிர் சுய உதவிக்குழு, பெண் காவலர்கள் போன்றவை கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள். ஸ்டாலின் முதல்வரானதும் பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.  நான்கு வழிச்சாலை மாற்று வழிப்பாதையில் அமைக்கவும், செண்பகவல்லி அணை கட்டவும் ஸ்டாலின் முதல்வரானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சிகளில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆ.துரை, செயற்குழு உறுப்பினர் சவுக்கை வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் வாசு., வடக்கு முத்தையா பாண்டியன், தெற்கு பூசப்பாண்டியன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்;கள் கோ.மாடசாமி, பேராசிரியர் நல்லசிவம், விவேகானந்தன், முத்தையா, பேரூர் செயலாளர்கள் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும் சிவகிரி செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம், ராயகிரி கேடிசி குருசாமி, வாசு., உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

sankarJan 17, 2021 - 04:35:26 PM | Posted IP 49.20*****

sema kamedi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory