» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெற்றி நடைபோடும் தமிழகம்: நாமக்கல்லில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி!

செவ்வாய் 29, டிசம்பர் 2020 12:43:11 PM (IST)"வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பிலான தேர்தல் பிரசாரத்தை தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல்லில் இன்று தொடங்கினார்.

பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்த பின் அங்குள்ள திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: அதிக அளவில் நன்மைகளை வழங்கிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வசூல் செய்வதற்காகவே சில கட்சிகள் உள்ளன. 

அது எந்த கட்சி என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்து வருகிறது. அதிக அளவில் கடன் வழங்கியது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. அதில் தேவையான கடன்களைப் பெற்று மக்கள் பயன் பெறலாம். நாமக்கல் மாவட்டம் அதிமுக ஆட்சியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என்றார்.  முன்னதாக பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory