» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கை! அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை: ரஜினி அறிவிப்பு
செவ்வாய் 29, டிசம்பர் 2020 12:09:13 PM (IST)
யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை. எனவே அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற குழுவினர் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி எனக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ப்பட்டது. ஆனால் எனக்கு நெகடிவ் வந்த போதிலும், ரத்தக் கொதிப்பில் மாறுபாடு ஏற்பட்டது. அவ்வாறு இருப்பது எனது உடல்நிலையை பாதிக்கும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. பல பேருக்கு வேலை இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அனைத்துக்கும் என் உடல்நிலையே காரணம். இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கிறேன். இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
MASSDec 29, 2020 - 03:05:55 PM | Posted IP 108.1*****
SAD
tamilanDec 29, 2020 - 01:59:26 PM | Posted IP 162.1*****
Rajini is always Great man....
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல் : விஜயகாந்த் அறிவிப்பு
செவ்வாய் 9, மார்ச் 2021 3:33:38 PM (IST)

கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் எனக் கூறினாலே போதுமானது: கமல் விமர்சனம்!
செவ்வாய் 9, மார்ச் 2021 3:29:09 PM (IST)

சென்னையில் கரோனா தாக்கம் அதிகரிப்பு: 10 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்
செவ்வாய் 9, மார்ச் 2021 8:46:48 AM (IST)

லாரி-கார் மோதல்: தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் பலி
செவ்வாய் 9, மார்ச் 2021 8:43:45 AM (IST)

மொபட் மீது லோடு ஆட்டோ மோதல்: மதபோதகர் - மனைவி பலி; பேத்தி படுகாயம்
செவ்வாய் 9, மார்ச் 2021 8:37:35 AM (IST)

திமுக கூட்டணியில் சமகவுக்கு சீட் உண்டா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு....
திங்கள் 8, மார்ச் 2021 8:49:40 PM (IST)

balaDec 29, 2020 - 03:55:00 PM | Posted IP 108.1*****